Qeren Yeh-shah
THE HORN OF SALVATION
கர்த்தர் என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.சங்-18:2
The Lord is my buckler, the horn of my salvation, and my high tower. Psalm-18:2
உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருக்கிற பாதங்களையுடைய மனுஷ குமாரனின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு பிப்ரவரி மாத பதுமராக நல்வாழ்த்துக்கள்!
சங்-51:12 தமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் நமக்குத் தந்து (இயேசு, நம் பாவங்களை மன்னித்து, நம்மை மீட்டுக்கொண்டு நம் இதயங்களில் வாழ்கிறபடியால்) உற்சாக ஆவி நம்மை தாங்கும்படி செய்கிறார். ஆகையால், ‘என் இருதயம் கர்த்தருக்குள் களிகூறுகிறது என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது, என் பகைஞரின் மேல் என் வாய் திறந்திருக்கிறது, உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.’ (1சாமு-2:1) என்று சொல்லி கர்த்தரைத் துதித்துப் பாடுகிற மாதம் இது.
சங்-92:10 இந்த ஆண்டில் (2025) புது எண்ணெயால் நம்மை அபிஷேகித்து, நம் கொம்பை காண்டா மிருகத்தின் கொம்பைப்போல் உயர்த்துகிறார்.
சங்-92:10 நீதிமான்களுடைய கொம்புகள் உயர்த்தப்படும். துன்மார்க்கருடைய கொம்புகள் வெட்டிப் போடப்படும் என்கிறார்.
1சாமு-2:10 இந்திய தேசத்தில் தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு பிலி-4:13ன் படி பெலனளித்து, தேசத்தின் தலைவர்களுக்காக ஜெபித்துவருகிற நம்மை அபிஷேகித்து நம் கொம்பை உயரப் பண்ணுகிறார்.
ஜெபம்: தாவீதின் வம்சத்தில் எழும்பிய இரட்சண்யக் கொம்பே, உம்மைப் போற்றிப், புகழ்கிறோம். இந்தியாவில் எங்கள் வாழ்வில் உம் வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உமது இரட்சண்யமும் விளங்கும்படியாய் எங்கள் பலத்தின் மகிமையாய் இரும். உமது தயவினால் எங்கள் கொம்பு உயர்வதாக. அநுக்கிரக மான இம்மாதத்தில் செவிகொடுத்து இரட்சண்ய நாளிலே உதவி செய்வீராக. யாக்கோபின் தேவனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுகிறோம். இயேசுவின் நாமத்தில். பிதாவே. ஆமேன்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி