February 2025

Editorial - இயக்குநரிடமிருந்து...

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

இவ்வாண்டின் 2ம் மாதத்தைக் காண நமக்கு கிருபை தந்த கர்த்தாதி கர்த்தருக்கு நம் நன்றிகளை செலுத்துவோம். ‘உலக சமூகநீதி தினம்’ இம்மாதம் (பிப். 2025) 20ம் நாளிலும், ‘த பிரசன்டேஷன் ஆஃப் த லார்ட்’ என்றழைக்கப்படும் குழந்தை இயேசுவின் ஆலய அர்ப்பணிப்பு தினம் பிப்ரவரி 2ம் நாளிலும் சிறப்பு தினங்களாக இம்மாதத்தில் ஆசரிக்கப்படுகின்றன. மனுக்குலத்தின் இரட்சகராகப் பிறந்து மனுக்குல விடுதலைக்காக பலியாய் அர்ப்பணிக்கப்பட்ட இயேசுவையும், அவரது சமூகநீதி போதனைகள் மற்றும் செயல்பாடுகளைளையும் நினைவில் கொண்டவர்களாய் நம்மை நாமே கடவுளின் அருட்பணிக்கு அர்ப்பணிப்போம்.

நமது ஊழிய திட்டங்களான ‘ஜெப-ஜன்னல்’ ஜெப நேரங்கள் (பிப்ரவரி 14, 21, 28), ‘அனைவரும்-ஊழியத்தில்’ - கைபிரதி ஊழிய திட்டம், ‘வேதாகம போட்டிகள்’ ஆகியவற்றில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), பத்திரிக்கை ஊழியங்கள், காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்

ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள் (தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன). தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா