Quiz
August 2026

போட்டி எண்:190 ( ஆகஸ்டு 2026 )


சங்கீதம் புத்தகம் - சங்கீதங்கள் 121 முதல் 150 வரை

1-3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,4,5,6,19) 4-12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன

வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-08-2026

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

1. ‘பஞ்சைப் போல் உறைந்த மழை’ என்பதை சத்தியவேதம், திருவிவிலியம், பரிசுத்த பைபிள் ஆகியவை இணைத்திருமறையில் எவ்வாறு குறிப்பிடுகின்றன?
2. சங்கீதம்-121 எவ்வாறு பெயரிட்டு அழைக்கப்படுகிறது?
3. ‘அல்லேலுயா’ என்ற துதி-ஒலியில் தொடங்கி ‘அல்லேலுயா’ என்ற துதி-ஒலியில் முடியும் சங்கீதங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
4. இசைவிணைப்பான நகரமாய் கட்டப்பட்டிருக்கிறது எது?
5. கண்ணீரோடு விதைக்கிறவர்கள் எவ்வாறு அறுப்பார்கள்?
6. கர்த்தர் எவர்களைத் தாங்குகிறார்? எவர்களைத் தூக்கிவிடுகிறார்?
7. ‘பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை’ - சரியா தவறா?
8. ‘மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்’ - சரியா தவறா?
9. ‘விசுவாசமுள்ள யாவும் கர்;த்தரை துதிப்பதாக’ - சரியா தவறா?
10. வாலவயதின் குமாரர் ‘இவன்’ கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்கள்:
அ) வேடன் ஆ) பலவான் இ) காவலன் ஈ) மேய்ப்பன்
11. கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய ‘இவைகளை’ அவர் அறுத்தார்:
அ) கட்டுகளை ஆ) கயிறுகளை இ) கதிர்களை ஈ) விளைச்சலை
12. கர்த்தர் ‘இதை’ தெரிந்துகொண்டு; அது தமக்கு வாசஸ்தலமாக விரும்பினார்:
அ) யூதாவை ஆ) எபிரோனை இ) கிருபாசனத்தை ஈ) சீயோனை
13. கோத்திரங்கள் பாத்திரமாய் தோத்தரிக்கப் போகும் ஊர்! சாஸ்திரச் சிங்காசன நியாயாசனங்கள் உள்ள ஊர்! இது என்ன ஊர்?
14. குட்டட்டும் இவன் குட்டட்டும், தலைக்கு எண்ணெயாகும், குட்டட்டும்! திட்டட்டும், இவன் திட்டட்டும், தட்டிக்கழிக்க மாட்டேன், திட்டட்டும்! ‘இவன்’ யார்?... ‘இவன்’ யார்?
15. கயிற்றுக் கண்ணியை மறைவாய் வைத்து கட்டிட இவர் முயல்கிறார்!
வழியில் சுருக்கு வலையை வைத்து வீழ்த்திட இவர் முயல்கிறார்!
இவர்கள் யார்? இவர்கள் யார்?



பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா