கலகம்-பிளவு: கிறிஸ்தவத்தில் அதிக பிளவுகளை 17ம் நூற்றாண்டு; கண்டது. இது சீர்திருத்தத்தின்; பின் விளைவு களால் ஏற்பட்டது. ‘கூனன் சிலுவை உறுதிமொழி’ (1653) மூலம் தாமஸ் கிறிஸ்தவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மற்றும் போர்த்துகீசிய தொடர்புக்கு எதிர்வினை ஆற்றினர். ஆனாலும், அவர்கள் அதன் உறுதியில் நிலைத்திருக்;க முடியவில்லை. ரோமன் கத்தோலிக்க தரப்பின் அழுத்தங்களால் தாமஸ் கிறிஸ்தவம் மீண்டும் பிளவுபட்டது. ஒரு குழு ரோமன் கத்தோலிக்கத்தில் இணைந்தது. மற்ற குழு இந்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஆனது.
சீர்திருத்தம் காரணமாக ஆக்கிலிக்கனிஸம், பிரஸ்பைடிரியனிசம், காங்கிரேகேஷனலிசம் மற்றும் பாப்டிஸ்ட் பிரிவுகள் உட்பட்ட புராட்டஸ்டன்ட் பிரிவுகள் தோன்றின. பியூரிட்டனிசத்தின் எழுச்சியும், இங்கிலாந்து திருச்சபையுடனான அதன் மோதலும் மேலும் பல பிரிவினைகளுக்கு வழிவகுத்தது. மட்டுமின்றி திருச்சபையின் சடங்குகள், நிர்வாகம் மற்றும் கோட்பாடுகள் குறித்த கருத்து வேறுபாடுகள் விவாதங்களுக்கும் பிளவுகளுக்கும் வழிவகுத்தன.
சமரச முயற்சிகள்:
கிறிஸ்தவ பிரிவுகளிடையேயான சமரச முயற்சிகள் பல்வேறு அளவுகளில் வெற்றி பெற்றன. கி.பி.1054ம் ஆண்டில் கிழக்கு மரபுவழி மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை இடையேயான பிளவுகளை சரிசெய்ய, கி.பி.1274 & கி.பி.1439ல் நடந்த சமரச முயற்சிகள் தோல்வியடைந்தன.
சீர்திருத்த காலப் பிளவுகளுக்குப்பின் கி.பி.1541ல் நடந்த ரெஜென்ஸ்பர்க் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. சீர்திருத்தம் பல்வேறு புராட்டஸ்டன்ட் பிரிவுகளின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடு, கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரத்திற்கும் பெரும் சவாலாய் அமைந்தது. இறையியல் வேறுபாடுகளை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. புராட்டஸ்டன்டிசம், பல பகுதிகளில்; சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றதால் இது நிரந்தரப் பிரிவினைக்கு வழிவகுத்தது.
உதயம்பேரூர் சினாடின்கீழ் தாமஸ் கிறிஸ்தவர்கள் அடிபணிந்த பிறகு, ரோமன் கத்தோலிக்க பிஷப்பாக இருந்த பிரான்சிஸ் ரோஸ் கிறிஸ்தவர்களை ரோமானிய மயமாக்கவும் லத்தீன் மயமாக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். தாமஸ் திருச்சபையின் ஆர்ச்டீகன், பள்ளியோகம்கள் மற்றும் காத்தனர்களின் அதிகாரங்களை கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் குறைத்தார். அவரது இரண்டு வாரிசுகளான ஸ்டீபன் பிரிட்டோ (1624-1641) மற்றும் பிரான்சிஸ் கார்சியா (1641-1659) ஆயர்களின் காலத்திலும் இதுவே நடந்தது. ரோஸ் மற்றும் பிரிட்டோவின் கீழ் துன்பப்பட்ட ஆர்ச்டீகன் ஜார்ஜ், கி.பி.1640ல் இறந்தார்.
கி.பி.1590ல் அலெப்போவில் பிறந்த அஹதல்லா கி.பி.1632க்கு முன்பு மோனோபிசைட் டமாஸ்கஸ் பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிஷப். அஹதல்லா சூரத்-கோவா-கொச்சியைத் தவிர்த்து 1652ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மயிலாப்பூரை சென்றார். அஹதல்லாவால் இந்தியாவில் முழு நிலைமையும் மாறியது. ஜேசுவைட்கள் அவரை அன்பாக நடத்தினர். தாமஸ் கிறிஸ்தவர்களும் தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு ஒப்பற்ற தலைவராக அஹதல்லாவை கருதினர்.
ஆனால், அஹதல்லாவை தங்களிடம் சேரவிடாத ரோம-போர்த்துகீசிய சூழ்ச்சியை உணர்ந்த தாமஸ் கிறிஸ்தவர்கள், மட்டஞ்சேரியிலுள்ள ‘அவர்லேடி’ தேவாலயத்தில், ‘கூனன் சிலுவை’ உறுதிமொழியை எடுத்தனர், அதில் போர்த்துகீசியர்களுக்கு ஒருபோதும் மீண்டும் அடிபணிய மாட்டோம்; என்று சபதம் செய்தனர். தாங்கள் தலைவராக்க விரும்பிய அஹதல்லாவை விட்டு தாமஸ் என்பவரை ஆர்ச் டீக்கன் ஆக்கினர். இந்த நடவடிக்கையால் உருவாக்கப்பட்டது தான் மலங்கரா சர்ச் என்ற சுயாதீன தாமஸ் கிறிஸ்தவ திருச்சபை.
புராட்டஸ்டன்ட் சபைகளின் நல்லிணக்கத்திற்கான அடிப்படை தேவைகள்: