Elohim Ya’Aseh Qulah
THE LORD WHO MAKES AN UTTER END
கர்த்தர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. நாகூ.1:9பி
The Lord will make an utter end: affliction shall not rise up the second time. Nah.1:9bThe Lord will make an utter end: affliction shall not rise up the second time. Nah.1:9b
சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிற இயேசுவானவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு ஆகஸ்டு மாத, சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ஆலயத்திற்கு ஆனந்த சத்தத்தோடே கடவுளின் சந்நிதிமுன் வந்து, உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள். ஏன்? தேவபிள்ளைகளுக்கு தலைவலி யாயிருந்த துஷ்டன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான் (நாகூ.1:9, 15).
யாரையெல்லாம் சங்காரம் பண்ணுவார்?
சங்.143:12 பரலோகப் பணிகளைச்செய்கிற தேவமனிதர்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்குகிற வர்களை கிருபையினால் அழிப்பேன்.
யோசு.11:10-12 ஆத்சோரின் சகல தீய வல்லமைகளையும், ஜெபிக்கிற தலை முறைகள் மூலம் சங்காரம்பண்ணுவேன். எந்தெந்த பட்டணங்களை ஆத்சோர் தன் ஆளுகைக்குள் வைத்திருந்ததோ அவ்விடங்களில் அதின் அதிகாரத்தையும் துரைத்தனத்தையும் வஞசக-செயலையும் யுத்த ஜெப-வீரர் மூலம் சங்கரிப்பேன்.
யோசு.8:24 கர்த்தரர் நாமத்தின்நிமித்தம், வனாந்திரபாதையில் நடந்துவந்த தேவபிள்ளைகளை துரத்தின ஆயியின் பிசாசுகளை சங்கரிக்கிற வல்லமை மற்றும் வரங்களால் தேவபிள்ளைகளை நிரப்பி, மாந்திரிகம் மற்றும் பில்லிசூனியம் செய்கிற இடங்களை மண்மேடுகள் ஆக்குவேன்.
நியா.1:12,17 கீரியாத், செப்பேர் மற்றும் கானானிய பிசாசுகளை முறிய அடித்து சங்காரம் பண்ணுகிற காலேப்புகளையும் சிமியோன்களையும் எழுப்புவேன்.
ஜெபம்: ஏக சக்ராதிபதியே! உம்மைப் போற்றுகிறோம். பெலிஸ்தரின் சகல மேன்மை, பலம், ஐசுவரியம், ஒற்றுமையை சங்காரம்பண்ணும்படி எங்களை அபிஷேகிப்பீராக (நியா.5:3-8). இது இயேசு ராஜாவின் செயல் என்று அறியும்படி அதிகாரத்தில் இருப்பவர்களின் மனக்கண்களைத் திறப்பீராக. இயேசுவின் நாமத்தில், பிதாவே. ஆமென்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி