August 2026

இயக்குநர் கடிதம்...

FROM THE MISSION DIRECTOR'S DESK

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

2026ம் ஆண்டின் 8வது மாதத்திற்குள் நம்மை வழிநடத்திய நம் வேந்தாதி வேந்தர் இயேசுவின் பாதம், பணிந்து தொழுவோம். இம்மாதம் 6ம் தேதி நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மறுரூபமான திருநாள் (THE TRANSFIGURATION OF THE LORD - FEAST DAY), 15ம் தேதி இந்திய சுதந்திர தினம் (THE INDEPENDENCE DAY OF INDIA), 24ம் தேதி அப்போஸ்தலனாகிய தூய. பர்தொலமேயுவின் திருநாள் (FEAST DAY OF ST. BARTHOLOMEW, THE APOSTLE), 29ம் தேதி பரி.யோவான் ஸ்நானனின் நினைவுநாள் (THE PASSION OF ST. JOHN THE BAPTIST - MEMORIAL DAY) ஆகிய திருநாட்களை ஆசரிக்கிறோம். இந்த திருநாட்களை ஜெபத்துடன் ஆசரித்து, ஆசீர்வாதம் பெற உங்களை அன்புடன் நினைவுபடுத்துகிறோம்.

ஜெப-ஜன்னல்-PWPM, வேதாகம-போட்டிகள்-RBCS, அனைவரும்-ஊழியத்தில்-AIMS ஆகிய திட்டங்களில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியம், புத்தக வெளியீட்டு ஊழியம், வலைதள ஊழியம் (www.ratchippu.com), காணொலி-செய்தி ஊழியம், ‘நல்ல-விதைகள்’ கைப்பிரதி ஊழியம், NMS மிஷனரி ஊழியம், திருச்சபை ஊழியம் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். வலைதள பதிவிற்கான லிங்க்: https://magazine.ratchippu.com 2015 ஆண்டு முழுமைக்கும் சரியான பதில்கள் எழுதி பரிசு பெற்றோர் பட்டியல் லிங்க்: https://magazine.ratchippu.com/quizWinners2025.html

ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா