வேத-பகுதி: 1 இராஜாக்கள்
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
வேதவசன இருப்பிடத்துடன் பதிலளிக்கவேண்டும்.
கடைசி நாள்: 25-08-2025
1. சாலோமோன் ராஜாவின் வர்த்தகர், புடவைகளை எவ்வாறு வாங்கினார்கள்?
2. சாலொமோன் தன் அரமனை முழுதும் கட்டிமுடிக்க எத்தனை வருஷம் ஆனது?
3. கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்தில் தரிசனமானது எங்கே?
4. இஸ்ரவேலின் எல்லையிலெல்லாம் அழகான, சூனேம் ஊர் பெண்; யார்?
5. தாவீது மரித்தபின், அடக்கம்பண்ணப்பட்ட இடம் எது?
6. சாலொமோனின் குமாரத்தியான பஸ்மாத்தை விவாகம்பண்ணியது யார்?
7. சாலோமோன் ராஜா கர்த்தருக்கு கட்டிய ஆலயத்தின் நீள-அகல-உயரம் என்ன?
8. சாலோமோன் சொன்ன நீதிமொழிகள் எத்தனை; அவரது பாட்டுக்கள் எத்தனை?
9. ‘தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் 140 வருஷம்’ - சரியா தவறா?
10. ‘ஈராம் தாவீதுக்கு சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்’ - சரியா தவறா?
11. ‘பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவை கட்டினான்’- சரியா தவறா?
12. ‘யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்’ - சரியா தவறா?
13. சாலொமோனின் நாட்களில் ‘இது’ ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை:
அ) வைரம் ஆ) ரத்தினம் இ) முத்து ஈ) வெள்ளி
14. அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த ‘இதை’ 12 - துண்டாக கிழித்தான்:
அ) புது போர்வை ஆ) மேல் அங்கி இ) புது சால்வை ஈ) துப்பட்டி
15. சாலொமோன் ராஜா, ஈராம் என்ற ஒருவனை ‘இங்கே’ இருந்து அழைப்பித்தான்:
அ) கிபியோன் ஆ) எகிப்து இ) சீதோன் ஈ) தீரு
16. ராஜா ‘இதனால்’ ஒரு பெரிய சிங்காசனத்தை செய்வித்தான்:
அ) தங்கம் ஆ) தந்தம் இ) வெள்ளி ஈ) வாசனை-மரம்
17. தேவ-வார்த்தை கேட்ட பீடம், பிரசங்க-பீடம் அல்ல! அரசனின் கை நீண்ட பீடம், ஆட்சி-பீடம் அல்ல! வாக்குப்படி
வெடித்த பீடம், தகன-பீடம் அல்ல! சாம்பல் சிந்தி-சிதறிய பீடம், தூப-பீடம் அல்ல! இது என்ன பீடம்?
18. அடங்காத துணைவியின் தூண்டலில் தாழ்ந்தேன்! அக்கிரம செயலுக்கு விலையாகி வீழ்ந்தேன்! அசுத்தமாம் சிலைகளின்
அடியொற்றி நடந்தேன்! ஆண்டவர் வாக்குக்கு அடிபணிந்து மீண்டேன்! நான் யார்?
19. அரசி ‘இவள்’ அகங்காரி! அரக்கி ‘இவள்’ அடங்கா-பிடாரி! ராஜ-முத்திரை கடிதம் போட்ட ராட்சஷி! வெள்ளந்தி மனிதனை
வீழ்த்திக்கொன்ற வாம்பயர் காட்டேரி! யார் இவள்?
20. ஏழு-முறை நோக்க எழும்பி நான் வந்தேன்! எலியாவின் சொற்படி எழுந்து நான் வந்தேன்! எக்கச்சக்கமாய், மழை-தந்து
சென்றேன்! நான் யார்?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463