Shemesh Ha -Tzedqah
THE SUN OF RIGHTEOUSNESS
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். மல்கியா - 4:2மு.
But unto you that fear my name, shall the Sun of righteousness arise. Malachi - 4:2a
சூரியனை, பகல் வெளிச்சத்துக்காயும், சந்திரன் மற்றும் நட்ச்சத்திர நியமங்களை இரா வெளிச்சத் துக்காகவும் கட்டளையிட்டவரும், அவைகள் குலுங்கத்தக்கதாக சமுத்திரத்தைக் கொந்தளிக்கச் செய்கிறவருமான சேனைகளின் கர்த்தரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு சுதந்திர மாத வாழ்த்துக்கள்!
நீதியின் சூரியன் உதிப்பதால் நமக்கு வரும் சுதந்திரங்கள்: மல்.1:11
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கம் திசை வரைக்கும் நீதியின் சூரியனானவர் இந்தியாவின் எல்லா மக்கள் கூட்டங்களுக்கும் மகத்துவமாயிருப்பார். அவருடைய நாமத்துக்கு துதி, ஸ்தோத்திரம் காணிக்கை கொண்டுவருவார்கள் (சங்கீதம்-100, ஏசாயா-60:1-13). மல்.4:2 நம் சரீரத்தில் உதிப்பதால், அவரது தழும்புகளால் ஆரோக்கியம் வருகிறது. ஊழியப் பாதையில், கொழுத்த கன்றுகளைப்போல் (சரீரத்தில் வாலிபத்தின் பெலன், ஆவியில் – ஆவிக் குறிய பெலன்) வளர்ந்துகொண்டே இருப்பீர்கள். துன்மார்க்கப் பிசாசை முழங்கால் ஜெபத்தினால் மிதிப்பீர்கள். சகல தீய சக்திகளையும் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாக்குவீர்கள், என்று தீர்க்கத்தரிசி சொல்லவில்லை; சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசா.30:26 சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்கின தமது ஜனத்தின் காயங்களைக் கட்டி, இதுவரை பாடாய் படுத்தின அந்தகார இருளின் கிரியைகளுக்கு முடிவை உண்டாக்கி, ஏழு பகல்களின் வெளிச்சத்தைக் கட்டளையிடுகிறார்.
ஜெபம்: நீதியின் சூரியனே! உம்மை துதிக்கிறோம், தோத்தரிக்கிறோம். எங்கள் மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும், எங்கள் திருச்சபை மீதும் உதிப்பதற்காய் உமக்கு ஸ்தோத்திரம் (எரே. 31:23). ‘நீதியின் வாசஸ்தலம்’ ‘பரிசுத்த பர்வதம’ என எங்களை முத்திரித்து, ‘கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்றவர்கள்’ என பட்டணத்தார் சாட்சியிடும்படி உயர்த்துகிறீர், உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் நன்றி, பிதாவே. ஆமென்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி