August 2025

இயக்குநர் கடிதம்...

FROM THE MISSION DIRECTOR’S DESK

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

இந்த ஆண்டின் 8ம் மாதத்தைக் காணச்செய்த கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். புதிய கல்லூரிகள் மற்றும் புதிய வகுப்புகளுக்குச் சென்றிருக்கிற உயர்கல்வி பயிலும் நம் பிள்ளைகளுக்கு சிறப்பான ஞானம் வழங்கப்பட ஜெபத்துடன் வாழ்த்துகிறோம். உயர்கல்வி பட்டப்படிப்புகளில் தேர்ச்சிபெற்றுள்ள நமது பிள்ளைகளுக்கு சிறப்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் ஜெபத்துடன் வாழ்த்துகிறோம். இம்மாதம் 6ம் தேதி இயேசுவின் மறுரூப திருநாளையும், 15ம் தேதி நம் நாட்டின் சுதந்திர தினத்தையும், 24ம் தேதி தூய. பர்தொலொமேயுவின் திருநாளையும் ஆசரிக்கிறோம். இந்த சிறப்பான நாட்களை ஆவியுடனும், கருத்து டனும், மகிழ்ச்சியுடனும் ஆசரிக்க உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

ஜூலை 3ம் தேதி தூய. தோமாவின் திருநாளையும், ஜூலை 22ம் தேதி தூய. மகதலேனா மரியாள் திரு நாளையும், ஜூலை 25ம் தேதி தூய. யாக்கோபுவின் திருநாளையும், ஜூலை மாதம் முழுவதும் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் மகத்துவத்தையும் ஆசரிக்கிறோம். இந்த சிறப்பான நாட்களை ஆவியுடனும், கருத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஆசரிக்க உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

நமது ஊழிய திட்டங்களான ‘ஜெப-ஜன்னல்’ ஜெப நேரங்கள் (ஆகஸ்டு 8, 15, 22), ‘அனைவரும்-ஊழியத்தில்’ - கைபிரதி ஊழிய திட்டம், ‘வேதாகம போட்டிகள்’ ஆகியவற்றில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கி றோம். வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), பத்திரிக்கை ஊழியங்கள், காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள்.

தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன). தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா