El hachiim veorech himim
THE LORD WHO IS LIFE AND LONGEVITY
உன் தேவனாகிய கர்த்தரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர். உபா.30:20பி
The Lord your God is your life, and the length of your days. Deu. 30:20a
மரித்தேன், ஆனாலும் இதோ, சாதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்ன இயேசுவானவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள். உயிர்த்தெழுந்த இயேசு, நம்முன் ஜீவனையம் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறார்.
உபா.32:46,47 ஜீவனாய் இருக்கிற வேதவார்த்தைகளை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் கைக்கொள்ளும்படி தேவன் அழைக்கிறார்; ஏனெனில், நியாயப் பிரமாண வார்த்தைகள் ஜீவனாய் இருக்கிறது. யோர்தான் போன்ற தடைகளைக் கடந்து ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கும் காலத்தில் உங்கள் நாட்களை நீங்கள் நீடிக்கப்பபண்ணுவீர்கள்.
உபா.32:40,39 “நானே அவர், நான் என் கரத்தை வானத்துக்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்; என்னோடே, வேறே தேவன் இல்லை உயிர்ப்பிக்கறவரும், சொஸ்தப்படுத்துகிறவரும் நானே” என்று கர்த்தர் சொல்கிறார்.
உபா.30:1-20 எழுதியிருக்கிறபடி, முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கர்த்தருடைய சத்ததுக்கு நாம் செவிகொடுக்கும்போது, நாம் கையிட்டுச் செய்யும் வேலைகளிலும், கர்ப்பத்தின் கனிகளிலும், நிலத்தின் கனிகளிலும், சகல நன்மைகளிலும் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
ஜெபம்: பிதாவே! ஜீவகாலமெல்லாம் மரணபயத்தில் வாழ்ந்துகொண்டிருப்போரின் பயத்தை நீக்க, மரணப் பிசாசை உம் குமாரனின் மரணத்தால் அழிக்கும்படி அவரை உயிரோடு எழுப்பியவரே, உமக்கு ஸ்தோத்திரம். நீர் எந்நாளும்[[]]][][] எங்களைக் காப்பாற்றி, எங்கள் எல்லைகளக்குள்ளே வாசமாயிருப்பீராக. உமக்குப் பிரியமானவர்களாயும், உம்மோடு சுகமாய் தங்கியிருக்கிறவர்க ளாயும் எங்களை அர்ப்பணிக்கிறோம். இயேசுவின் நாமத்தினாலே பிதாவே, அல்லேலூயா. ஆமென்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி