கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
2026ம் ஆண்டின் 4ம் மாதத்தைக்காண நம்மை வழிநடத்திய வானாதி வானவரை வாழ்த்திப் பணிவோம். இம்மாதத்தின் முதல் வாரம் புனித வாரத்தின் முக்கிய பகுதியாகும். 1ம் தேதி உளவு-புதன் (SPY WEDNESDAY), 2ம் தேதி கட்டளை-வியாழன் (MAUNDY THURSDAY), 3ம் தேதி பெரிய-வெள்ளி (GOOD FRIDAY), 4ம் தேதி கருப்பு-சனி (BLACK SATURDAY), 5ம் தேதி ஈஸ்டர்-பண்டிகை (EASTER SUNDAY) ஆகிய திருநாட்களை ஆசரிக்கிறோம். மட்டுமல்ல, பெரும்பாலான திருச்சபைகளில் இம்மாதத்தின் கடைசியில் நம்-பிள்ளைகள் மற்றும் அனைத்து மார்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் இயேசுவின் அன்பைப் பகிர்ந்தளிக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி (VACATION BIBLE SCHOOL - VBS) தொடங்கப்படுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயபக்தியுடன் பங்குபெற்று, ஏப்ரல் மாதத்தின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
‘ஜெப-ஜன்னல்’ ‘வேதாகம-போட்டிகள்’ ‘அனைவரும்-ஊழியத்தில்’ ஆகிய நமது ஊழிய திட்டங்களில் பங்குபெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியங்கள், வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், NMS மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.